briyani



 சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.


சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – டம்ளர்
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – டீஸ்பூன்
மல்லித்தூள் – டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 2
லவங்கம் -5
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 4
சீரகம் – டீஸ்பூன்
தயிர் -டீஸ்பூன்


சிக்கன் பிரியாணி செய்முறை:

·         முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரியும் வரை கிளறவும்.

·         பிறகு நறுக்கிய வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய்தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் . தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள்மிளகாய்த்தூள்மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         பிறகு அதனுடன் மல்லியிலைபுதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதில் சிக்கன் போட்டு நிமிடங்கள் வரை அதனை நன்றாக வதக்கவும். வதங்கியதுதும் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி விசில் வரை விடவும்.

·         பிறகுஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும் மேலும் டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவேண்டும். குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும்.
அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான பிரியாணி தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 1 மணிநேரம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 2